செய்தி விளையாட்டு

INDvsNZ – இரண்டாம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்திய அணி

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டேரில் மிட்செல் 82 ரன்னும், வில் யங் 71 ரன்னும் அடித்தனர்.

இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் 90 ரன்னும், ரிஷப் பண்ட் 60 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

நியூசிலாந்து சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். வில் யங் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

(Visited 41 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி