INDvsAUS – 3ம் நாள் ஆட்டத்தில் பும்ராவின் நிலை என்ன?
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.
2ம் நாள் பாதியில் கேப்டன் பும்ரா காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றார். அதன் காரணமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி அணியை வழிநடத்தினார்.
அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து பும்ரா மைதானத்திற்கு வந்தார். இந்நிலையில், நாளைய 3ம் நாள் ஆட்டத்தில் பும்ரா விளையாடுவாரா? என கேள்வி எழும்பி உள்ளது.
இந்நிலையில், இன்றைய 2ம் நாள் ஆட்டத்திற்கு பின் இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பும்ராவுக்கு முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்றார்.
மருத்துவக்குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர்கள் அனுமதி கொடுத்தால் பும்ரா நாளைய ஆட்டத்தில் விளையாடுவார். இவ்வாறு அவர் கூறினார்.