INDvsAUS – ஆஸ்திரேலிய பந்துவீச்சில் தடுமாறும் இந்திய அணி
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 86 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய 157 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கேஎல் ராகுல் களமிறங்கினர். கேஎல் ராகுல் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 24, விராட் கோலி 11, சுப்மன் கில் 28, ரோகித் சர்மா 6 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
ரிஷப் பண்ட் 28 ரன்களுடனும் நிதிஷ் 15 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், போலண்ட் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.