இந்தோனேசியாவின் மராபி எரிமலை வெடிப்பு : 11 பேர் பலி!
இந்தோனேசியாவில் உள்ள மராபி எரிமலை வெடித்ததில் 11 மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெடித்த எரிமலைக்கு அருகில் ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் 12 பேரை காணவில்லை, மீண்டும் சிறிய அளவில் எரிமலை வெடித்ததால் அவர்களை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எரிமலை வெடித்தபோது 75 மலையேறுபவர்கள் அருகில் இருந்தனர், அவர்களில் பலர் கொல்லப்பட்டனர்.





