திருமணத்திற்கு முன் உடலுறவு மற்றும் மது அருந்திய இந்தோனேசிய ஜோடிக்கு 140 பிரம்படி
இந்தோனேசியாவின்(Indonesia) ஆச்சே(Aceh) மாகாணத்தில், திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டதற்காகவும் மது அருந்தியதற்காகவும் ஷரியா(sharia) காவல்துறையினர் ஒரு ஜோடிக்கு தலா 140 முறை பிரம்படி தண்டனை வழங்கியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில், ஒரு பொது பூங்காவில் பிரம்பு குச்சியால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தண்டனையை அனுபவித்த பிறகு அந்தப் பெண் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மொத்தத்தில், இந்த ஜோடிக்கு 140 பிரம்படிகள் வழங்கப்பட்டன. திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டதற்காக 100 மற்றும் மது அருந்தியதற்காக 40 என்று ஷரியா காவல்துறை தலைவர் முகமது ரிசால்(Mohammad Rizal) குறிப்பிட்டுள்ளார்.





