உலகம் செய்தி

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை – இந்தோனேசியா அதிரடி

இளைஞர்களை நிகழ்நிலை துஷ்பிரயோகங்கள் மற்றும் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் சில பிரபலமான நிகழ்நிலை தளங்களை பயன்படுத்துவதற்கு இந்தோனேசியா தடை விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அதிக ஆபத்து கொண்ட தளங்களில் 16 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகள் மார்ச் 28 முதல் செயலிழக்கப்படும் என நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சர் மியூத்யா ஹஃபித் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை முதற்கட்டமாக YouTube, TikTok, Facebook, Instagram, Threads, X, Bigo Live மற்றும் Roblox போன்ற தளங்களில் அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையால், வயதிற்கு ஏற்ப சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களை அணுகுவதை தாமதப்படுத்தும் முதல் மேற்கத்திய அல்லாத நாடாக இந்தோனேசியா மாறும் என்றும் அவர் கூறினார்.

ஆபாசப் படங்கள், சைபர்புல்லிங், நிகழ்நிலை மோசடிகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான உள்ளடக்கங்கள் போன்ற உண்மையான அச்சுறுத்தல்களை நமது குழந்தைகள் அதிகமாக எதிர்கொண்டு வருகின்றனர். இது மிகவும் கவலைக்குரியது,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு யுனிசெஃப் வெளியிட்ட ஆய்வின் படி, கணக்கெடுக்கப்பட்ட 510 இந்தோனேசிய சிறுவர்களில் பாதி பேர் சமூக ஊடகங்களில் பாலியல் தொடர்பான படங்களை பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குழந்தைகளைக் கொண்ட 42 வயதான வேலைக்குச் செல்லும் தாய் அமண்டா குசுமோ, “என் மகன் டிஜிட்டல் உலகில் என்ன செய்கிறான் என்பதை தொடர்ந்து கண்காணிக்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை. இத்தகைய அரசாங்க விதிமுறைகள் பெற்றோர்களின் கவலைகளை குறைக்க உதவும்,” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், அவரது 17 வயது மகன் மாட் ஜோசப், இந்தத் தடைக்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளதாகக் கூறினார். “குழந்தைகள் தங்கள் திரை நேரத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மை. ஆனால் அனைத்துத் தளங்களையும் முற்றிலும் தடுக்காமல், ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறை இருக்கலாம்,” என்றார்.

டிசம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்த முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதேபோல் ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றன.

இதற்கு முன்பாகவும் இந்தோனேசியா நிகழ்நிலையில் பாலியல் வெளிப்படையான உள்ளடக்கங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. OnlyFans மற்றும் Pornhub போன்ற ஆபாச தளங்களும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!