இந்தோனேசியா பள்ளி கட்டட விபத்து – இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம்!
இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதுவரை 59 பேர் மாயமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை சிடோர்ஜோ நகரில் உள்ள இரண்டு மாடி பள்ளிக்கட்டடம் இடிந்து விழுந்தது.
இதன்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். மீட்பு முயற்சிகள் தொடங்கியதிலிருந்து பதின்மூன்று பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில இரண்டுபேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் நிலையற்ற அமைப்பு காரணமாக மீட்புப் பணிகள் சவாலானதாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இன்று (02.10) வியாழக்கிழமை, வெப்ப ட்ரோன்களைப் பயன்படுத்தும் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து உயிர் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியத் தவறிவிட்டதாக பேரிடர் தணிப்பு நிறுவனம் (BNBP) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





