இந்தோனேசியா மண்சரிவு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு
இந்தோனேசியாவில்(Indonesia) ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பலரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா(West Java) மாகாணத்தில்மேற்கு பண்டுங்(West Bandung) பகுதியிலுள்ள கிராமமொன்றிலேயே இன்று இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 34 பேர் அடையாளம் காணப்பட்டதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமை செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி(Abdul Muhari) தெரிவித்துள்ளார்.
மேலும், “அடையாளம் காணப்பட்ட உடல்கள் அடக்கம் செய்வதற்காக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேரழிவால் 50க்கும் மேற்பட்ட வீடுகளை கடுமையாக சேதமாகியுள்ளது மற்றும் 650க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





