இந்தோனேசியா – பாலியில் போதைப் பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை!

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலா தளமான பாலியில் போதைபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தாய்லாந்து நாட்டவர்கள், Rachanon Jongseeha, மற்றும் அவரது காதலி Woranawan Wongsuwan, ஆகியோர் செப்டம்பர் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் போதைப் பொருட்களை ஆர்டர் செய்தமைக்காக இரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு பேரும் துப்பாக்கிச் சூடு மூலம் மரணதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)