கலிபர் ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணைகளை துருவ பகுதிக்கு அனுப்பிய புட்டின்!
விளாடிமிர் புடின் தனது இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ஆர்க்டிக்கில் உள்ள துருவப் பகுதிக்கு அனுப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சோவியத் சகாப்தத்திற்குப் பிறகு ரஷ்யாவின் மிகப் பெரிய அணுசக்தி பலத்தை காட்டும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.
கலிபர் ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட பேரரசர் அலெக்சாண்டர் III என்ற மூலோபாய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை 4,000 கடல் மைல் தூரத்தில் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு அடக்குமுறை நாடுகளுக்கு இடையே அதிகரித்த ஒத்துழைப்பின் அடையாளமாக சீன கடற்படை பல பயிற்சிகளை மேற்கொண்டது.
முன்னதாக ஆறு நாட்கள் நீடித்த போர்ப் பயிற்சியின் போது, புடின் இரண்டு Tu-160 ‘White Swan’ மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை ஐக்கிய இராச்சியத்தின் கடற்பகுதிக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.