சீனாவின் கப்பலை விரட்டியடித்த இந்தோனேசியா!
இந்தோனேசிய ரோந்து கப்பல்கள் மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக சீனாவின் கப்பல் ஒன்றை விரட்டியடித்ததாக அறிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம், சீன கப்பல் ஒன்று ஜியோபவளப் பாறையை நெருங்கியபோது விரட்டியடித்ததாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், கடலோர காவல்படை கப்பல் சீன அதிகார வரம்பிற்கு உட்பட்ட கடல் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இந்தோனேசியாவுடன் இராஜதந்திர வழிகள் மூலம் தொடர்பு மற்றும் ஆலோசனைகளை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள கடல்சார் வேறுபாடுகளை சரியாக கையாளவும் சீனா தயாராக உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
(Visited 2 times, 1 visits today)