இந்தோனேசியா தலைநகரில் பூனை மற்றும் நாய் இறைச்சிக்கு தடை விதிப்பு
இந்தோனேசியா(Indonesia) தலைநகர் ஜகார்த்தாவில்(Jakarta) ரேபிஸ்(rabies) பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகர ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ரேபிஸ் மற்றும் விலங்கு நலன் குறித்த வளர்ந்து வரும் பொது சுகாதார கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடை ஜகார்த்தா ஆளுநர் பிரமோனோ அனுங் விபோவோவால்(Pramono Anung Wibowo) கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்தத் தடை உயிருள்ள விலங்குகள், இறைச்சி மற்றும் அனைத்து பச்சை அல்லது பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கும் பொருந்தும்.
இந்தோனேசியாவின் நாய் இறைச்சியை ஒழிப்பதற்கான ஆர்வலர் குழு இந்த நடவடிக்கையை வரவேற்று, இந்தக் கொள்கை “அனைத்து இந்தோனேசிய மக்களை பாதுகாப்பதற்கும், நீதியான மற்றும் நாகரிகமான தேசமாக மாறுவதற்கும்உதவும்” என்று தெரிவித்துள்ளது.





