எரிபொருள் கசிவால் வாரணாசியில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்

கொல்கத்தாவிலிருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ (IndiGo) விமானம், எரிபொருள் கசிவைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் (Varanasi) உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் (Bahadur Shastri International Airport) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த 166 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், “தேவையான சோதனைகளுக்காக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது, பயணத்தைத் தொடர மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது, வழக்கமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
(Visited 4 times, 4 visits today)