வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, குவைத்திலிருந்து(Kuwait) டெல்லிக்கு(Delhi) புறப்பட்ட இண்டிகோ(IndiGo) விமானம் அவசரமாக அகமதாபாத்(Ahmedabad விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாகக் கூறும் ஒரு காகித குறிப்பை பயணி கண்டுபிடித்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் அகமதாபாத்திள் தரையிறங்கியுள்ளது.
இந்நிலையில், 180 பயணிகளுடன் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல்(Sardar Vallabhbhai Patel) சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் விமானத்தை முழுமையாக சோதனை செய்தனர், மிரட்டல் குறித்து எவ்வித சந்தேகத்திற்கிடமான பொருளும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




