இலங்கை வந்தடைந்த இந்தியாவின் ஒன்பதாவது அவசர நிவாரண விமானம்
இந்தியாவின் “ஆபரேஷன் சாகர் பந்து”(Operation Sagar Bandhu) திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகளின் ஒன்பதாவது தொகுதி கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை(BIA) வந்தடைந்துள்ளது.
மேலும், இந்தப் பொருட்களுடன் இந்திய இராணுவப் பொறியாளர் படையைச் சேர்ந்த 13 பொறியாளர்களும் உதவி வழங்க வருகை தந்துள்ளனர்.
இலங்கை இராணுவப் பொறியாளர் படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்தப் பொருட்களை முறையாகப் பெற விமான நிலையத்தில் ஒன்று கூடியுள்ளனர்.




