விளையாட்டு

இந்தியா தோல்வி – விராட் இல்லை என வேதனையடைந்த ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோ டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இல்லாமல் இந்த தொடரில் இந்திய அணி எப்படி விளையாடப்போகிறது என்கிற கேள்விகளும் எழுந்தது. ஆனால், பேட்டிங்கில் முடிந்த அளவுக்கு முதல் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

ஜூன் 20-24 தேதிகளில் லீட்ஸ், ஹெடிங்லியில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 371 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி வெற்றிகரமாக விரட்டியடித்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது அதிகபட்ச 4ஆம் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த தோல்வியை அடுத்து, சமூக வலைதளமான X-ல் ரசிகர்கள் முன்னாள் வீரர் விராட் கோலியை நினைவு கூர்ந்து பதிவிட்டனர். குறிப்பாக, கோலியின் புகழ்பெற்ற “60 ஓவர்கள் நரகமாக இருக்க வேண்டும்” என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டி, அவரது ஆக்ரோஷமான தலைமை மற்றும் எதிரணியை வீழ்த்தும் உத்வேகத்தை இந்திய அணி இழந்துவிட்டதாக கருத்து தெரிவித்தனர்.

கோலி மற்றும் ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணியின் புதிய யுகம் இந்த தோல்வியுடன் தொடங்கியது, இது ரசிகர்களிடையே கோலியின் தாக்கத்தை மீண்டும் உணர வைத்தது. இதற்கு முன்பு அவர் விளையாடியபோது எடுத்த வீடியோவை வெளியீட்டு இந்த நேரத்தில் அனைவரும் விராட்கோலியை தான் மிஸ் பண்றாங்க என வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், இந்திய அணியின் இந்த தோல்வி, 148 ஆண்டுகள் டெஸ்ட் வரலாற்றில் ஒரு போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்தது. ரசிகர்கள், கோலியின் தீவிரமான அணுகுமுறையும், எதிரணியை அழுத்தம் கொடுத்து ஆதிக்கம் செலுத்தும் திறனும் இந்த போட்டியில் இந்தியாவுக்கு தேவைப்பட்டதாக உணர்ந்தனர். இருப்பினும், அடுத்த டெஸ்ட் ஜூலை 2ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி தங்களது தவறுகளை சரிசெய்து வலுவாக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ