இலங்கையிலிருந்து சட்டவிரோதமான ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல முற்பட்ட இந்தியர்கள் கைது
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிலைகொண்டிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் கூற்றுப்படி, 43 மற்றும் 39 வயதுடைய இருவரும் ஜூன் 26 அன்று சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளனர், மேலும் போலி கடவுச்சீட்டை தயாரித்து நெதர்லாந்து செல்ல முயன்றனர்.
எனவே, அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
(Visited 5 times, 1 visits today)