அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ள இந்தியர்கள் : ஒன்றிய அரசு தகவல்

ஜனவரி முதல் 388 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2025 முதல் மொத்தம் 388 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இவர்களில் 333 பேர் பிப்ரவரியில் மூன்று தனித்தனி இராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்காவிலிருந்து நேரடியாக நாடு கடத்தப்பட்டனர்.
மேலும், வணிக விமானங்கள் மூலம் பனாமா வழியாக 55 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியதாக வெளிவிவகாரத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)