ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளை நோக்கி நகரும் இந்தியர்கள் – அயர்லாந்தில் குவியும் விண்ணப்பங்கள்

கடந்த பத்தாண்டுகளில் அயர்லாந்தில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளது.

அயர்லாந்திற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஆலோசகர் அனிதா கெல்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு 800 என காணப்பட்ட இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்து 2022ஆம் ஆண்டு 7,000-ஐத் தொட்டதாக கெல்லி கூறினார்.

ஆனால், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இந்த ஆண்டு மாணவர் விண்ணப்பம் மற்றும் ஏற்பு அதிகரிப்பைக் கண்டுள்ளன.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை NMIMS இன் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி மற்றும் ஷானோன் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி இடையே இரட்டை பட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவுக்கான அயர்லாந்தின் தூதர் கெவின் கெல்லியை மேற்கோள் காட்டி, வல்லுநர்கள் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ நெருங்குவதாக நம்பப்படுகிறது, பெரும்பாலான மாணவர்கள் முதுகலை படிப்பைத் தேர்வு செய்கிறார்கள், ஆனால் இளங்கலைக் கல்விக்கும் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சர்வதேச மாணவர்களுக்கான விசா எண்களை கனடாவும், ஆஸ்திரேலியாவும் அதிக அளவில் மட்டுப்படுத்தி வரும் நிலையில், இந்தியர்கள் மற்ற இடங்களைத் தேடுகிறார்கள். அதற்கமைய, அயர்லாந்து பயனடைந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

 

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!