ஜார்ஜியாவில் உயிரிழந்த இந்தியர்கள் : ஆணவக் கொலையாக இருக்கலாம் என சந்தேகம்!
ஜார்ஜியாவின் காகசஸ் மலைகளில் உள்ள பிரபலமான ஸ்கை ரிசார்ட்டில் உள்ள உணவகம் ஒன்றில் 12 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திபிலிசிக்கு வடக்கே சுமார் 75 மைல் தொலைவில் அமைந்துள்ள ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட ஸ்கை ரிசார்ட்டான குடாரியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜார்ஜியாவில் உள்ள உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“குடாரியில் அமைந்துள்ள இந்திய உணவகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஓய்வு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலங்கள் அங்கு பணிப்புரிந்தவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முதற்கட்ட பரிசோதனையில், உடலில் காயங்கள் அல்லது வன்முறை அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் ஆணவக் கொலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஜார்ஜியாவின் குற்றவியல் கோட் பிரிவு 116 இன் கீழ் ஒரு விசாரணை தொடங்கப்பட்டது.