வட அமெரிக்கா

கனடாவில் இந்தியப் பெண் மரணம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பெண், கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பேக்கரி அடுப்பில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வழக்கில், வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கனடா பொலிஸார் விளக்கம் கொடுத்துள்ளனர்.

ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் 19 வயதான குர்சிம்ரன் கௌர் என்ற 19 வயது பெண், சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதமாகின்றது.

இந்த நிலையில், அவரது மரணத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்றும், விசாரணை முடிவுக்கு வந்திருப்பதாகவும் கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் தொடர்பு அதிகாரி மார்டின் கிரோம்வெல் கூறுகையில்,

என்ன நடந்திருக்கும் என்பது குறித்து ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. அது தொடர்பான விசாரணைக்கு சில காலம் எடுக்கும். ஆனால், முதற்கட்ட விசாரணையில், பலரிடம் விசாரணை நடத்தியும், விடியோ காட்சிகளை ஆய்வு செய்துள்ளோம். இன்று நாங்கள் நடத்திய விசாரணையின் நிலையை வெளியிடவிருக்கிறேன், இந்த மரணத்தில், எந்த சந்தேகமும் இல்லை. இந்தியப் பெண் மரணத்தில், வெளி நபர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக எந்த தடயமும் கிடைக்கவில்லை. அவரது மரணம் சந்தேகத்துக்கு இடமான மரணம் என நாங்கள் கருதவில்லை என்று தெரிவித்துள்ளார். அதுபோல, இந்த வழக்கில், மக்களின் கவனமும் இருக்கிறது என்பதையும், பதில் சொல்ல முடியாத சில கேள்விகள் இருப்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்