ஐரோப்பா

வெளிநாடொன்றில் ஆப்பிரிக்க பெண்களால் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய பெண் (வீடியோ)

நெதர்லாந்தில் இந்திய பெண்ணொருவரை ஆப்பிரிக்க பெண்கள் மூவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.

அந்த காணொளியில் இந்தியப் பெண்ணை நோக்கி ஆப்பிரிக்க பெண் ஒருவர் எதிர்ப்பு குரலை எழுப்பினார்.அதற்கு இந்தியப் பெண்ணும் பதில் கூறுகிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியது.

இந்திய பெண்ணின் கையில் இருந்த கருப்பு கைப்பையை ஆப்பிரிக்க பெண் இழுக்கிறார்.இந்திய பெண் அதை தடுக்கும் நேரத்தில், ஆப்பிரிக்க பெண் அவரது முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கடுமையாக தாக்குகிறார்.

ஆப்பிரிக்க பெண்ணுடன் இருந்த மற்ற பெண்களும் தாக்குதலை தடுக்காமல் அவருடன் சேர்ந்து மேலும் இந்தியப் பெண்ணை தாக்கியுள்ளனர்.இருப்பினும், இந்த சண்டையின் பின்னணியில் உள்ள சரியான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்