பிரான்ஸை நோக்கி படையெடுக்கும் இந்திய சுற்றுலாப் பயணிகள்

பிரான்ஸிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 40 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் பிரான்ஸ் செல்லும் இந்தியர்களும் அதிகரித்துள்ளதாக லைரா நெட்வொர்க்கின் (Lyra Network) தலைவர் கிறிஸ்டோப் மேரியட் (Christophe Marriott) தெரிவித்து்ளளார்.
ஒரு வருடத்திற்கு முன்பு நாம் ஈபிள் டவரில் UPI வசதியை அறிமுகப்படுத்தினோம். அதன் பிறகு, இந்திய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் 40 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என ஈபிள் டவரின் பொது மேலாளர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
UPI பயன்பாடு இந்திய பயணிகளுக்கு வெளிநாட்டிலும் பரிச்சயமானதும் பாதுகாப்பானதும் என நம்பிக்கை அளிக்கிறது. ஒரு பயணியான நீங்கள், உங்கள் சொந்த நாட்டின் கட்டண முறையை வெளிநாட்டிலும் பயன்படுத்தும் போது, அது நம்பிக்கையையும் பாதுகாப்பையும் தருகிறது. மேலும், செலவின் சரியான தொகையை ரூபாயில் காண்பதும், அதே அளவு உங்கள் வங்கி கணக்கிலிருந்து குறையுவதும் பயணிகளுக்கு நிம்மதியைக் கொடுக்கிறது என மேரியட் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ், குறிப்பாக பாரிஸ் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களில், UPI ஒருங்கிணைப்பு இந்தியர்கள் அதிகம் வரவேற்கும் மாற்றமாக உருவெடுத்துள்ளது.
இது இந்திய சுற்றுலாப் பயணிகள் செலுத்தும் நேரத்தை மற்றும் பண பரிமாற்ற செலவுகளை குறைக்கும் பயன்களுடன், இந்திய பயணிகளுக்கான பயண அனுபவத்தையும் மேம்படுத்துகிறது.