விளையாட்டு

இலங்கை வந்தடைந்த இந்திய அணி

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர். இதில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

இதே போன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அஜித் அகர்கர் மற்றும் கவுதம் காம்பீர் இருவரும் கலந்து கொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இன்று இலங்கை வந்தடைந்தனர்.

இதில் கவுதம் காம்பீர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், ரவி பிஷ்னோய், சுப்மன் கில், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ், ரியான் பராக், ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வீரர்கள் இலங்கை வந்துள்ளனர்.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!