உலகம் செய்தி

அமெரிக்காவில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய தபேலா இசைக்கலைஞர்

இந்தியாவை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசைன் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இதனிடையே, 73 வயதான ஜாகிர் உசைன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஜாகிர் உசைனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!