கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நீர்மூழ்கி கப்பல்
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை நேற்று காலை வந்தடைந்துள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய கடற்படையால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் 67.5 மீட்டர் நீளமானதாகும். இந்த நீர்மூழ்கியில் 53 பணியாளர்கள் உள்ளனர்.
அவர்கள் நாட்டின் முக்கியத்துவம் மிக்க பல இடங்களைப் பார்வையிடவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காகவும், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில், பங்கேற்க உள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலில் வருகை தந்த கடற்படை தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.