ஜெர்மனியில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற இந்திய மாணவர் மரணம்
கடந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று ஜெர்மனியில்(Germany) ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தெலுங்கானாவைச்(Telangana) சேர்ந்த 22 வயது பொறியியல் மாணவர் உயிரிழந்துள்ளார்.
ஜங்காவ்ன்(Jangaon) மாவட்டத்தின் சில்பூர் மண்டலத்தில்(Silpur mandal) உள்ள மல்காபூர்(Malkapur) கிராமத்தைச் சேர்ந்த ஹ்ருதிக் ரெட்டி(Hruthik Reddy), பெர்லினுக்கு(Berlin) அருகிலுள்ள பிராண்டன்பர்க்கில்(Brandenburg) தங்கியிருந்தார்.
இந்நிலையில், அவரது அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, இதனால் அவர் உள்ளே சிக்கிக்கொண்டார்.
வேகமாக பரவி வரும் தீ மற்றும் அடர்ந்த புகையிலிருந்து தப்பிக்க ஹ்ருதிக் குடியிருப்பின் மேல் மாடியில் இருந்து குதித்ததால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயர்கல்விக்காக ஜெர்மனிக்குச் செல்வதற்கு முன்பு வாரங்கலில்(Warangal) உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஹ்ருதிக் தனது பொறியியல் படிப்பை முடித்திருந்தார்.





