அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை பாராட்டிய இந்திய பிரதமர் மோடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
காசா பகுதிக்கான அமெரிக்க அமைதி திட்டத்தை கடுமையாக்கியதற்காக அவர் இந்த பாராட்டினை தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது X கணக்கில் ஒரு பதிவில் இதைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையில் காசா பகுதியில் அமைதியை ஏற்படுத்த இரு நாடுகள் என்ற கருத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இணங்க, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று ஒரு கடுமையான முடிவை எடுத்தார்.
“நாளை மாலை 6:00 மணி வரை அவகாசம் தருகிறேன். அமைதி திட்டத்தை ஏற்காவிட்டால், நரகத்தை பார்க்க நேரிடும்” என, ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




