ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரை சந்தித்த இந்திய பிரதமர்
தென்னாப்பிரிக்காவில்(South Africa) வசிக்கும் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோர்(tech entrepreneurs) மற்றும் இந்திய சமூக உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது தொழில்நுட்ப தொழில்முனைவோரை இந்தியாவுடனான தங்கள் ஈடுபாட்டை ஆழப்படுத்துமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) உள்ள மோடி, ஒரு சமூக ஊடகப் பதிவில், இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோருடன் தனக்கு பயனுள்ள தொடர்பு இருந்ததாகவும், நிதி தொழில்நுட்பம், சமூக ஊடக தளங்கள், விவசாயம், கல்வி, சுகாதாரம், மருத்துவ சாதனங்கள் மற்றும் பல துறைகளில் அவர்கள் செய்து வரும் பணிகள் குறித்து பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக பிரதமர் மோடி ஆஸ்திரேலிய அந்தோணி அல்பானீஸை(Anthony Albanese) சந்தித்த பிறகு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்த நரேந்திர மோடி
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்த பிரதமர் மோடி




