செய்தி

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை சந்தித்த இந்திய பிரதமர்

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி ஆய்வு செய்தார். இதோடு எரிசக்தி, உயிரி எரிபொருள், பாதுகாப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.

நைஜீரியாவுக்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வந்த பிரதமர் மோடி, இங்கு நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், “நாங்கள் எங்கள் நாடுகளுக்கு இடையிலான முழு அளவிலான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தோம்.

எரிசக்தி, உயிரி எரிபொருள்கள், பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

19வது ஜி20 மாநாட்டை பிரேசில் நடத்துகிறது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் லூலாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

 

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி