வெனிசுலா இடைக்கால ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் தொலைபேசி பேச்சுவார்த்தை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi), வெனிசுலாவின்(Venezuela) இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸுடன்(Delcy Rodriguez) தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தையில், இரு தலைவர்களும் நாட்டின் உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல ஒப்புக்கொண்டுள்ளனர்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ(Nicolas Maduro) மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா(America) கைது செய்த பின்னர் ரோட்ரிகஸுக்கும் மோடிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பு இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், “எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியா மற்றும் வெனிசுலா இடையிலான உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும் அனைத்து துறைகளிலும் எங்கள் இருதரப்பு கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று X பதிவு மூலம் மோடி தெரிவித்துள்ளார்.





