இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரவை வரவேற்ற இந்திய ஜனாதிபதி, பிரதமர்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்றனர்.
இந்த சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்வு புது டில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.





