49 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வாடும் இந்திய மக்கள் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அந்நகரில் இன்று (29.05) 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மாநில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட டெல்லி மக்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெப்ப அலைகள் உக்கிரமடைந்துள்ளமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
(Visited 34 times, 1 visits today)