வெள்ளை மாளிகையில் இரண்டாவது தடவையாக ஒலித்த இந்திய தேசப்பற்றுப் பாடல்
ஆசிய அமெரிக்கர்கள், ஹவாய் மற்றும் பசுபிக் தீவில் வசிப்பவர்களின் பாரம்பரிய மாதம் அமெரிக்காவில் ஆண்டுதோறும் மே மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் நேற்று (13)தடந்த கொண்டாட்டத்தன் போது அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மரைன் இசைக்குழுவினர் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்பு இந்தியாவின் தேசப்பற்றுப் பாடலான ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை வாசித்து அங்கு கூடியிருந்த ஏராளமான ஆசிய அமெரிக்கர்களை வரவேற்றனர்.
வெள்ளை மாளிகையில் இந்தியவின் தேசப்பற்றுப்படால் இசைக்கப்படுவது ஒராண்டு காலத்துற்குள் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர், பிரமர் நரேந்திர மோடி கடந்தாண்டு ஜீன் 23 அன்று அமெரிக்கா சென்ற போது இந்த பாடல் இசைக்கப்ப்ட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய அமெரிக்கர்கள் பூர்வீக ஹவாய் மற்றும் பசுபிக் தீவில் வசிப்பவர்களின் பாரம்பரிய மாத்த்தில் இந்த பாடல் இசைக்கப்பட்டிருப்பது இந்திய – அமெரிக்க உறவின் மீதும் அந்த மக்கள் மீதும் ஜோ பைடன் மற்றும் அவரது குவுவினர் எந்தளவு மதிப்பு வைத்துள்ளனர் என்பதைக்க காட்டுகிறது என இந்திய அமெரிக்கத் தொழிலதிபரான பூட்டோரியா கூறினார்