அமெரிக்காவில் எப்பிஐ புதிய இயக்குநராக இந்திய வம்சாவளி தேர்வு
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் பதவியேற்க உள்ளார்.
இதற்கு முன்பாக தனது நிர்வாகத்தின் உயர் பதவிகளில் தனக்கு நம்பிக்கையான நபர்களை நியமித்து வருகிறார்.
இதில் இந்திய வம்சாவளிகளுக்கு டிரம்ப் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
ஏற்கனவே இந்திய வம்சாவளிகளான விவேக் ராமசாமி, துளசி கபார்ட் ஆகியோருக்கு முக்கிய துறைகளை வழங்கிய டிரம்ப், எப்பிஐ இயக்குநராக இந்திய வம்சாவளியான காஷ்யப் படேலை தேர்வு செய்ததாக நேற்று அறிவித்தார்





