ஆஸ்திரேலியாவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின்(Australia) குயின்ஸ்லாந்தில்(Queensland) உள்ள கடற்கரையில் 24 வயது பெண்ணைக் கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டோயா கார்டிங்லே(Toyah Cordingley) என்ற பெண்ணை கொன்ற வழக்கில் 41 வயது முன்னாள் செவிலியர் ராஜ்விந்தர் சிங்(Rajwinder Singh) குற்றவாளி என்று கெய்ர்ன்ஸில்(Cairns) உள்ள உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜ்விந்தர் சிங்கின் கொலைக்கான நோக்கம் தெரியாது என்றும் இது ஒரு சந்தர்ப்பவாதக் கொலை என்றும் நீதிபதி லிங்கன் க்ரோலி(Lincoln Crowley) குறிப்பிட்டுள்ளார்.
21 அக்டோபர் 2018 அன்று கெய்ர்ன்ஸுக்கு வடக்கே வாங்கெட்டி(Wangetti) கடற்கரையில் கோர்டிங்லேயை சிங் கொன்றதாக தி கார்டியன்(The Guardian) செய்தி வெளியிட்டுள்ளது.




