லண்டனில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி நபர் கைது
கிழக்கு லண்டனில்(London) ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 57 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இல்ஃபோர்டின்(Ilford) ஆப்பிள்கார்த் டிரைவில்(Applegarth Drive) உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தில் தலீப் சத்தா(Dalip Chadha) என்ற நபர் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர் அவரது மனைவி என்று நம்பப்படுகிறது, இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை, ஆனால் பாதிக்கப்பட்டவர் 58 வயதான வனேசா பன்ட்னி-சத்தா(Vanessa Puntney-Chadha) என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலை தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல் உள்ள எவரும் முன்வருமாறு பெருநகர காவல்துறை வலியுறுத்தியுள்ளது.




