கலிபோர்னியாவில் மது ஆலைக்கு தீ வைக்க முயன்ற இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது
கலிபோர்னியாவின்(California) சரடோகாவில்(Saratoga) உள்ள ஒரு மது ஆலைக்கு தீ வைக்க முயன்றதாகக் கூறப்படும் 42 வயதான இந்திய வம்சாவளி தொழிலதிபர் விக்ரம் பெரி(Vikram Beri) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விக்ரம் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சாலையில் கார்களை மோதி விபத்துக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் பலமுறை வாய்மொழியாக நிலைமையை தணிக்க முயன்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும், மிக நீண்ட மோதலுக்குப் பிறகு மிளகு தெளிப்பைப்(pepper spray) பயன்படுத்த வேண்டியிருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் அவர் காவலில் எடுக்கப்பட்டு மதிப்பீட்டிற்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார், பின்னர் அவர் சாண்டா கிளாரா கவுண்டி(Santa Clara County) பிரதான சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டெய்லி மெயிலில்(Daily Mail) வெளியான அறிக்கையின்படி, விக்ரம் மனநிலை சரியில்லாத நடத்தையை வெளிப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





