பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகம் மீதான 36 ஆண்டுகால தடையை நீக்கிய இந்தியா
பிரபல அமெரிக்க எழுத்தாளர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகமான ‘The satanic Verses’ மீதான 36 ஆண்டுகால தடையை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது .
1988 இல் வெளியிடப்பட்ட நாவல் இறக்குமதியைத் தடை செய்யும் அறிவிப்பு செல்லாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
“தி சாத்தானிக் வெர்சஸ்” என்ற புத்தம் வெளியிடப்பட்டபோது, அது இஸ்லாமிய தூதர் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்ததாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் 1988ம் ஆண் தடை செய்யப்பட்டது.
1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் திகதி திகதியிட்ட அரசாணையை சிபிஐ ஒப்படைக்கத் தவறியதால், அது ‘கண்டுபிடிக்க முடியாதது’ என நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
சல்மான் ருஷ்டி 1947ம் ஆணடு இந்தியாவில் பிறந்த ஒரு பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளர். ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ புத்தகம் 1988ம் ஆண்டில் லண்டனில் வெளியிடப்பட்டது.
இவர் Clarissa Luard, Marianne Wiggins, Midnight’s Children போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.
2019ம் ஆண்டு சந்தீபன் கான் என்ற நபர் சல்மான் ருஷ்டியின் புத்தத்தை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய கோரிக்கை வைத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நுகர்வோர் சட்டம், 1962-ன் படி, இந்தியாவில் சாத்தானின் வசனங்கள் புத்தகத்தை இறக்குமதி செய்ய தடை விதித்த அறிவிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது, அதனை நீக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கான் வாதிட்டார்.
இந்த நிலையில் 36 ஆண்டுகால தடையை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.