விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சுமார் 34.19 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பெங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 3 கிலோ 419 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.





