150 ஆண்டுகள் நோக்கிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பயணம் ; கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு
இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 15 உடன் 150 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், வருகிற ஜனவரி 15 முதல் இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இது தொடர்பாக புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: 150 ஆண்டுகள் என்ற மைல் கல்லை இந்திய வானிலை ஆய்வு மையம் எட்டவுள்ளது. அதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் வருகிற ஜனவரி 15 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 வரை பல்வேறு விதமாக கொண்டாட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன. அடுத்தாண்டு ஜனவரி 15 ஆம் திகதிக்குப் பிறகும் சில கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





