கஜகஸ்தானில் சாலை விபத்தில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழப்பு
கஜகஸ்தானில்(Kazakhstan) நடந்த சாலை விபத்தில் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார், மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், செமி(Semey) மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 11 இந்திய மாணவர்கள் விபத்தில் சிக்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர் 25 வயதுடைய மில்லி மோகன்( Milli Mohan) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், காயமடைந்தவர்கள் ஆஷிகா ஷீஜாமினி சந்தோஷ்(Ashika Shijamini Santosh) மற்றும் ஜசீனா பி(Jasina B), தற்போது உஸ்ட்-கமெனகோர்ஸ்க்(Ust-Kamenogorsk) நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





