அமெரிக்காவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபரை தடுத்த இந்திய நபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில், தான் வேலை செய்யும் கடைக்கு வெளியே சாலையில் சிறுநீர் கழித்த ஒருவரைத் தடுத்தற்காக ஹரியானாவை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான கபில், கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடையில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தார். கடைக்கு வெளியே சிறுநீர் கழித்த ஒருவரை எதிர்த்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து, குற்றம் சாட்டப்பட்டவர் துப்பாக்கியை எடுத்து அவரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
கபிலின் உடலை அவரது கிராமத்திற்கு கொண்டு வர மத்திய அரசும் ஹரியானா அரசும் உதவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)