அமெரிக்காவில் கூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவில் கூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்திய வம்சாவளி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் காணாமல் போன மனைவி குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யாமல் கணவர் மறுமணம் செய்வது எப்படி என கூகுளில் தேடியுள்ளார்.
இந்த நிலயில் அவ்வாறு தேடிய இந்தியர் கைது செய்யப்பட்டார்.
வர்ஜீனியா மாகாணம் மனஸ்சாஸ் பார்க்கில் வசித்து வரும் இந்தியரான நரேஷ் பட்டின் மனைவி மம்தா கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் காணாமல் போனார்.
காணாமல் போன மனைவியை கண்டுபிடிக்க முயற்சிக்காமல், மனைவி மரணம் அடைந்தால் கடன் என்னவாகும்? என கூகுளில் நரேஷ் தேடியுள்ளார்.
அத்தோடு வீட்டில் இருந்த ரத்தக்கறை, கடையில் மகேஷ் பட் வாங்கிய கத்தி உள்ளிட்ட பொருட்கள் போன்றவற்றை ஆதாரமாக கொண்டு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





