சவூதி அரேபியாவில் வீடியோ அழைப்பில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர்(Muzaffarnagar) மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது நபர் ஒருவர், இந்தியாவில் தனது மனைவியுடன் வீடியோ அழைப்பின் போது சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீடியோ அழைப்பின் போது மனைவியான 21 வயது சானியா உடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ரியாத்தில்(Riyadh) உள்ள தனது வீட்டின் கூரையில் ஆஸ் முகமது அன்சாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு, அவரது மனைவி சவுதி அரேபியாவில் வசிக்கும் உறவினர்களுக்குத் தகவல் அளித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏப்ரல் 7ம் திகதி போபா(Boba) கிராமத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவரின் உடலைத் திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.





