இலங்கை

இலங்கைக்கு 300 மில்லியன் ரூபாவை நிதி மானியமாக வழங்கும் இந்திய அரசாங்கம்!

இலங்கை பொலிஸ் வாகனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவியாக 300 மில்லியன் இலங்கை ரூபாவை நிதி மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இந்த உதவித்தொகையை பயன்படுத்தி வடமாகாண பொலிஸ் நிலையங்களின் கடமை தேவைகளுக்காக கெப் வண்டிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்காக இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 2 times, 3 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்