பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானின் 16 யூடியூப் தளங்களுக்கு இந்திய மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக போலியான செய்திகளை வெளியிட்டதற்காக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய Dawn, Samaa TV, ARY News, Bol News, Raftar, Geo News மற்றும் Suno News உள்ளிட்ட யூடியூப் தளங்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தரின் யூடியூப் தளமும் உள்ளடங்குகின்றது.
காஷ்மீர் – பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் லஸ்கர் ஈ தாய்பாவின் நிழல் அமைப்பான ரெஸிஸ்டண்ட் முன்னணி, குறித்த தாக்குதலைப் பொறுப்பேற்றுள்ளது.
(Visited 1 times, 1 visits today)