இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் சனிக்கிழமை (டிசம்பர் 07) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 08) ஆகிய இரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து முக்கிய மீனவர் சங்கங்களின் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





