போர் பதற்றத்தால் இந்திய பொருளாதாரம் அழுத்தத்தில்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால், இந்திய பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற சூழல், இந்தியா போன்ற கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நீடித்த மோதல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்திய அரசின் நிதிநிலைக்கு அழுத்தம்
ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அங்கிருந்து கிடைக்கும் வருவாயும் குறைந்தால் இந்திய பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் அலுவலகம் முக்கிய அமைச்சகங்களுடன் இணைந்து நிலைமையை ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




