ஸ்தீரமான நிலையில் இந்திய பொருளாதாரம்!
2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் Nirmala Sitharaman, மக்களவையில் Lok Sabha இன்று (29) முன்வைத்தார்.
அந்த அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடரில் பாதீடு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நிதி அமைச்சு சார்பில் பொருளாதார ஆய்வறிக்கை முன்வைக்கப்படுவது வழமை.
உலகப் பொருளாதார நிலைமைகள் நிச்சயமற்றதாகவும் நிலையற்றதாகவும் உள்ளது. எனினும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை தொடர்ந்து நேர்மறையாகவே உள்ளது.
எனவே, 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்றும், 2027-28 நிதி ஆண்டில் இது 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 7.4 ஆக இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில், சர்வதேச நாணய நிதியம் 7.3 சதவீதம் ஆக இருக்கும் என்றும், உலக வங்கி 7.2 சதவீதம் ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளன.




